யாழ்.பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்திற்கு புதிய பீடாதிபதி நியமனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி சிவசிந்துஜா ஶ்ரீகோகுலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் பீடாதிபதியாகக் கடமையாற்றிய தெய்வி தபோதரனின் பதவிக்காலம் நிறைவுக்கு வந்ததை அடுத்து, புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்வதற்காக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடச்சபை நேற்று(21) வியாழக்கிழமை கூடியது.

புதிய பீடாதிபதி தெரிவுக்காக இருவர் போட்டியிட்டனர்.

கலாநிதி சிவசிந்துஜா ஶ்ரீகோகுலன் 4 மேலதிக வாக்குகளால் முன்னிலை பெற்றுப் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

இன்று முதல் அடுத்துவரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது.