யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அண்மையில் பதவியேற்ற பேராசிரியர். திருநாவுக்கரசு வேல்நம்பிக்கு அவர் பிறந்த இடமான யாழ் புத்தூர்க் கிராமத்தில் கல்வி பயின்ற சோமாஸ்கந்தக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (05.03.2026) பிற்பகல்-02 மணியளவில் விழாச் சபையின் ஏற்பாட்டில் பாராட்டு விழா நடைபெறும்.
புத்தூர் சோமாஸ்கந்தக் கல்லூரி அதிபர் சி.திரிகரன் தலைமையில் மேற்படி பாராட்டு விழா இடம்பெறும். விழாவில் சமயத் தலைவர்களின் ஆசி உரைகள், சமூகத் தலைவர்களின் வாழ்த்துரைகள் மற்றும் பாராட்டுரைகள் என்பன நடைபெறும். நிகழ்வில் வேல்நம்பி தொடர்பான ஆவணப்பட வெளியீடு, புதுவை நம்பி எனும் தலைப்பிலான பாராட்டு விழாச் சிறப்பு மலர் வெளியீடு என்பனவும் இடம்பெறும்.






