ரணிலுக்கு சத்திரசிகிச்சை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சத்திரசிகிச்சை  ஒன்றிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று வியாழக்கிழமை (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

குறித்த சத்திரசிகிச்சை மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் பூரண குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.