வைத்தியர்களின் உள்ளகப் பயிற்சி நியமன மனுக்கள்: மே மாதம் 8 ஆம் திகதி தீர்ப்பு!

சர்ச்சைக்குரிய மேலதிக மருத்துவ உள்ளகப் பயிற்சி நியமனச் செயல்முறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்த தீர்ப்பை, மே மாதம் 08ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டது.

தமது பயிற்சிக் காலத்தை நிறைவு செய்த இரு வைத்தியர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறித்த நியமன நடைமுறையில் உள்ள சிக்கல்கள் தொடர்பாகவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.