வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கத் தலைவராக மீண்டும் வீரசுரேந்திரன் தெரிவு

வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும்  ஞாயிற்றுக்கிழமை (22.02.2026) மாலை வல்வெட்டித்துறைச் சந்தியிலுள்ள நகரசபை மண்டபத்தில் வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கத் தலைவர் பா.வீரசுரேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கத் தலைவராகப் பாலச்சந்திரமூர்த்தி வீரசுரேந்திரன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டதுடன் புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.