வவுனியா பூந்தோட்டம் பிரதான வீதியில் இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் பகுதி நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியும், பூந்தோட்டம் பகுதியிலிருந்து நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த மற்றொரு முச்சக்கர வண்டியும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.





