அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது என இன்று (8) பாராளுமன்றத்தில் சாணக்கியன் குறிப்பிட்டதோடு, வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல்வீரர்களாக அரசு செயற்பட வேண்டுமென்றும் சுட்டுக்காட்டியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை சாணக்கியன் பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை தொடர்பான அரசின் தீர்மானம் என்ன என்பது போன்ற கேள்விகளை முன்வைத்த நிலையில், அந்தக் கேள்வி நேற்றைய தினமே தனக்குக் கிடைத்தது என சபையில் இன்று பிரதமர் தெரிவித்தார்.
அத்துடன் அந்தக் கேள்விக்கு பதிலளிக்க தனக்கு இரு கிழமைகள் அவகாசம் வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அந்தக் கேள்வியானது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. உள்நாட்டுப் பொறிமுறையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சர்வதேச பொறிமுறை வேண்டும் எனவும், மாகாண சபை தேர்தல் தொடர்பிலும், மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையினைப் பற்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக சாணக்கியன் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதனை, இன்றைய தினம் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய சாணக்கியன்,
“அரசானது எனது கேள்விகளுக்கு பதிலளிக்காது நழுவிச் செல்கிறது. வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல் வீரர்களாக இந்த அரசு செயல்பட வேண்டும் என சர்வதேச சமூகம் ஐ.நா மனித உரிமைகள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறு அல்லாமல் எமக்கான, எமது மக்களுக்கான பிரச்சினைக்களுக்கான தீர்வுகளை, அரசு இந்த நழுவல் போக்கினை கைவிட்டு தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.