புலத்சிங்கள பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த மான் கொம்புகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சங்குகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை விமானப்படை புலனாய்வு பிரிவினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், ரிட்டிகல, குருநாகல் மற்றும் ஹிக்கடுவ வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து திங்கட்கிழமை (மார்ச் 30) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையிலேயே குறித்த மான் கொம்புகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சங்குகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது, சந்தேகநபர்களின் கைவசமிருந்து தடைசெய்யப்பட்ட Horned Helmet என்ற 3 சங்குகள், Chiragra Spider Conch என்ற ஒரு சங்கு, Smooth Spider Conch என்ற ஒரு சங்கு, தடைசெய்யப்பட்ட மேலும் 4 சங்குகள் மற்றும் 8 மான் கொம்புகள் ஆகியவை வனவிலங்கு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

