5 ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவரும் குற்ற செய்திகளால் பொதுமக்கள் அச்சம்

‘தமிழகத்​தில் கடந்த 5 ஆண்​டு​களில் குற்​றச் செய்​தி​கள் தொடர்ந்து வெளிவரு​வ​தால் மக்​கள் அச்​சம் அடைந்​துள்​ளனர்’ என்று எதிர்க்கட்சியினர் குற்​றம்​சாட்​டி​யுள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: கிருஷ்ணகிரி மாவட்​டம், ஊத்​தங்​கரை அருகே முதி​ய​வர் கொலை செய்​யப்​பட்​டு, மூதாட்டி மனை​விக்கு பாலியல் வன்​கொடுமை, சென்னை திரிசூலத்​தில் இரு​வர் படு​கொலை, தென்காசி மாவட்​டம் சங்​கரன்​கோ​வில் அருகே விவ​சாயி படு​கொலை… இப்​படி தொடர்ச்​சி​யாக வரும் கொலை செய்​தி​கள், பாலியல் குற்​றச் செய்​தி​கள் மக்​களிடையே அச்ச உணர்வை அதி​கரித்​துள்​ளது.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: சென்னை திரிசூலத்​தில் 17 வயது சிறு​வன் உட்பட இரு​வர் மர்ம நபர்​களால் படு​கொலை செய்​யப்​பட்​டுள்​ளனர். தமிழகத்​தில் கடந்த ஐந்​தாண்​டு​களாக கொலை, கொள்​ளை, பாலியல் சம்​பவங்​கள், அரி​வாள் வெட்டு ஆகியவை அன்​றாட நிகழ்​வு​களாகி விட்​டன.

பாமக தலை​வர் அன்​புமணி: சென்னை பல்​லா​வரத்தை அடுத்த திரிசூலம் பகு​தி​யில் இரு​வர் கொடூர​மான முறை​யில் வெட்​டிப்படு​கொலை செய்​யப்​பட்​டிருப்​பதும், ஊத்​தங்​கரை அரு​கில் முதி​ய​வர் படு​கொலை செய்​யப்​பட்டு அவரது மனைவி பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​டிருப்​பதும் அதிர்ச்​சி​யளிக்​கின்​றன.

தவெக கொள்கை பரப்பு பொதுச்​செய​லா​ளர் ஆதவ் அர்ஜுனா: அமை​திப் பூங்​கா​வாக இருந்த தமிழகம், திமுக ஆட்​சி​யில் அச்​சமூட்​டும் கொலைக்​கள​மாக மாறி இருக்​கிறது.

திமுக அரசாங்​கத்​தில் சட்​டம்​-ஒழுங்கு எவ்​வாறு சீர்​குலைந்து போய் இருக்​கிறது என்​ப​தற்கு கடந்த ஒரு வாரத்​தில் மட்​டும் நடை​பெற்ற சம்​பவங்​களே சாட்​சி. இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.