சசிகலா – தினகரன் மோதல் தீவிரம்: அமமுக நிர்வாகிகள் அதிருப்தியும், உள்ளரசியலும்!

வி.கே.சசிகலாவை சந்தித்த நிர்வாகிகளை, அமமுக பொதுச் செயலாளர் தினகரன் நீக்கி வருவதால், சசிகலாவுக்கும். தினகரனுக்குமான மோதல் பகிரங்கமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சசிகலா, அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிரான அஸ்திரங்களை எடுத்து வருவதாலேயே. தினகரன் இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு. முதல்வராகப் பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலாவும். தினகரனும் சேர்ந்தே நீக்கினர். அதன்பின் சசிகலாவின் முழு ஆதரவுடன் பழனிசாமி முதலமைச்சரானார். அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம். அவர்களுக்கு எதிராக ‘தர்ம யுத்தம்’ நடத்தியது வரலாறு. அதன்பிறகு சசிகலா. தினகரன். ஓ.பன்னீர்செல்வம் ஆகிய 3 பேருக்கும் பொதுவான ஒரே எதிரியாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மாறினார்.

ஒரு கட்டத்தில் தினகரன் அமமுக கட்சியை தொடங்கினார். பழனிசாமியை மிக தீவிரமாக எதிர்த்து வந்த தினகரன், தற்போது அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்து விட்டார். தீவிர அரசியலில் சில காலம் ஒதுங்கியிருந்த சசிகலா. தற்போது அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிராக தேர்தலில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் ஓ.பன்னீர்செல்வம் சேர இருப்பதாக கூறப்படுவதால், தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில், திருமங்கலம் பகுதியை சேர்ந்த அமமுக நிர்வாகி ஜீவிதா உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த அக்கட்சியினர் பலர் சசிகலாவை சந்தித்தனர். இதனால் அதிருப்தியடைந்த தினகரன், தன்னை கேட்காமல் சசிகலாவை சந்தித்த ஜீவிதாவை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார். டிடிவி.தினகரன், பழனிசாமியுடன் ஒருங்கிணைந்து அதிமுக கூட்டணியில் சேர்ந்து பணியாற்ற தொடங்கிவிட்டாலும், அமமுகவில் சசிகலா ஆதரவாளர்கள், தற்போது அவரை சந்தித்து வருகிறார்கள்.

இதுகுறித்து அமமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: அமமுக, அதிமுக பாஜக கூட்டணியில் சேர்ந்ததும், கோவில்பட்டியில் போட்டியிட தயாராகி வந்த அமமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த மாணிக்கம் ராஜா திமுகவில் சேர்ந்தார்.

கோவில்பட்டியில் அதிமுகவின் கடம்பூர் ராஜூதான் கண்டிப்பாக போட்டியிடுவார் என்பதால்,தனக்கு ‘சீட்’ கிடைக்காது என்ற முடிவுக்கு வந்ததாலேயே அவர் இந்த முடிவை எடுத்தார். அதுபோல், திருமங்கலம் தொகுதியில் அமமுக-வை சேர்ந்த ஜீவிதா தனக்கு ‘சீட்’ கிடைக்கலாம் என எதிர்பார்த்திருந்தார்.

திருமங்கலத்தில் அதிமுகவில் ஆர்.பி.உதயகுமார்தான் போட்டியிடுவார் இ என்பதால், தனக்கு ‘சீட்’ கிடைக்காது என்பதாலேயே சசிகலாவை ஜீவிதா சந்தித்து கூட்டணிக்கு விரோதமாகச் செயல்பட்டார். அதனால், அவரை டிடிவி.தினகரன் கட்சியை விட்டு நீக்கினார். கூட்டணிக்கான தொகுதிப் பட்டியல் வந்தவுடன் அதில் தங்கள் தொகுதி இல்லை என்றால், இதுபோல் இன்னும் சிலர் விலகலாம்.

இவர்களை போன்றவர்களுக்கு கட்சி தனித்தும் I போட்டியிடக் கூடாது, கூட்டணியும் வைக்க வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும் என்பார்கள். ஆனால், கூட்டணி இவர்கள் விருப்பப்படும் கூட்டணி என்பதைவிட. இவர்களுக்கு ‘சீட்’ கிடைக்க வாய்ப்புள்ள கூட்டணி வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

மற்றபடி, இவர்களுக்கு பதவி ஆசை என்பதை தவிர விசுவாசம் என்பதெல்லாம் கிடையாது. டிடிவி.தினகரனை விடவா, இவர்களுக்கு சசிகலா மீது பாசம் இருக்கப் போகிறது. சசிகலாவுக்கு எதிராக ஒட்டுமொத்த கட்சியினரும் நின்றபோது, டிடிவி.தினகரன் தான் அவர் பக்கம் நின்றார்.

அதனால்தான், அதிமுகவில் மிகப்பெரிய பகையை சந்தித்தார். சசிகலா குடும்பத்தில், டிடிவி.தினகரனை தவிர மற்றவர்கள் தீவிர அரசியலில் தொடர்ச்சியாக ஈடுபடவில்லை. ஜெயலலிதா இருந்தபோது திரைமறைவு அதிகாரத்தில் மட்டுமே அவர்கள் பங்கெடுத்தனர். கஷ்ட காலத்தில் எல்லாம் இளைஞராக இருந்தது முதல் தற்போது வரை கட்சிக்காகவும், ஜெயலலிதா, சசிகலாவுக்காகவும் நின்றவர்தான் டிடிவி. தினகரன். ஆனால், சசிகலா தற்போது வரை டிடிவி.தினகரனிடம் பேசவில்லை. மாறாக, அவரது நடவடிக்கைகளுக்கு எதிரான அரசியலை சசிகலா முன்னெடுத்துள்ளதால், டி.டி.வி.தினகரன் கவலை அடைந்துள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சசிகலா – டி.டி.வி.தினகரன் மோதலால் சமூக வலைதளங்களிலும் அமமுகவினரே இரு பிரிவாக மோதிக் கொள்வதால், சசிகலா, அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிராக ஏதோ முடிவை எடுத்துள்ளதாகவே தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சமீபத்திய செய்திகள்