தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது.
முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணிக்கு எண்ணப்பட தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி தவெக: 109, அதிமுக: 75, திமுக: 50 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. முன்னிலை நிலவரப்படி அதிமுக 2-ம் இடத்திலும், ஆளும் திமுக 3-ம் இடத்திலும் இருக்கின்றன. திமுகவின் படுதோல்வி நிலவரம் அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் 16 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலை. தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் உள்பட 31 அமைச்சர்கள் பின்னடைவு





