தாம்பரம் காவல் ஆணையர் அலுவலக கட்டிடத்தை காலி செய்யும் விவகாரம்: தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது

தாம்பரம் காவல் ஆணை​யர் அலு​வல​கம் இயங்​கும் தனி​யாருக்கு சொந்​த​மான கட்​டிடத்தை 2 ஆண்​டு​களில் காலி செய்து கொடுக்க வேண்​டும் என்று தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வில் தலை​யிட முடி​யாது என தலைமை நீதிபதி அமர்வு தெரி​வித்​துள்​ளது.

தாம்பரம் காவல் ஆணை​யர் அலு​வல​கம், சோழிங்​கநல்​லூர் பகு​தி​யில் தனி​யாருக்கு சொந்​த​மான கட்​டிடத்​தில் வாடகை அடிப்​படை​யில் இயங்கி வரு​கிறது. இந்​நிலை​யில் தங்​களது கட்​டிடத்தை காலி செய்து தரக் கோரி உரிமை​யாளர்​களான கோட்​டூர்​புரம் சரத்​கு​மார், வெங்​கடேஷ், சவுத்ரி ஆகியோர் தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

இந்த வழக்கை விசா​ரித்த தனி நீதிபதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்​தில் பிறப்​பித்த உத்​தர​வில், இந்த கட்​டிடத்​துக்​கான வாடகையை ரூ. 6 லட்​சத்​தில் இருந்து ரூ. 13 லட்​ச​மாக உயர்த்​தி​யும், இந்த கூடு​தல் தொகை​யான ரூ. 2.18 கோடியை கடந்த ஆண்டு டிசம்​பருக்​குள் மனு​தா​ரர்​களுக்கு வழங்க வேண்​டுமென்​றும், 2 ஆண்​டு​களில் அந்த கட்​டிடத்தை காலி செய்து மனு​தா​ரர்​களிடம் ஒப்​படைக்க வேண்​டுமென​வும் தெரி​வித்​திருந்​தார்.

இந்த உத்​தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்​பில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மனுமீதான விசா​ரணை தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​த​வா, நீதிபதி ஜி.அருள்​முருகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்​தது.

அப்​போது தமிழக அரசு தரப்​பில் ஆஜரான தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன், “தாம்பரம் காவல் ஆணை​யர் அலு​வல​கத்​துக்கு சொந்த கட்​டிடம் கட்ட நிலம் தேர்வு செய்​யப்​பட்டு விட்​டது.

பிப்​.13-ம் தேதி முதல்​வர் ஸ்டா​லின் அடிக்​கல் நாட்டுகிறார். 18 மாதங்​களில் அந்த கட்​டிடம் கட்டி முடிக்​கப்​படும். அது​வரை தனி நீதிபதி உத்​தர​வுக்கு தடை விதிக்க வேண்​டும்” என வாதிட்​டார்.

இதையடுத்து நீதிப​தி​கள், வாடகையை உயர்த்​தி​யும், 2 ஆண்​டு​களில் காலி செய்து கொடுக்க வேண்​டுமென்​றும் தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வுக்கு தடை விதிக்க முடி​யாது என தெரி​வித்து விசா​ரணையை 2 மாதங்​களுக்கு தள்ளி வைத்​துள்​ளனர்.