“திமுக கைக்கூலிகள் ராமதாஸை இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள்” – அன்புமணி வேதனை

​ரா​ம​தாஸ் 10 வயது குழந்தை போல ஆகி​விட்​டார். சில துரோகி​கள், திமுக கைக்​கூலிகள் அவரது மனதை கெடுத்து இந்த நிலைக்கு கொண்டு வந்​து​விட்​டனர் என்று பாமக தலை​வர் அன்புமணி தெரி​வித்​தார்.

பாமக மகளிர் சங்க மாநில பொதுக்​குழு கூட்​டம் சென்​னையை அடுத்த பல்​லா​வரத்​தில் நேற்று நடந்​தது. கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி தலை​மை​யில் நடந்த கூட்​டத்​தில் பசுமை தாயகம் அமைப்​பின் தலை​வர் சவுமியா அன்​புமணி, பாமக பொதுச்​செய​லா​ளர் வடிவேல் ராவணன், பொருளாளர் தில​க​பாமா மற்​றும் மகளிர் சங்க நிர்​வாகி​கள் கலந்து கொண்​டனர்.

பெண்​கள் மற்​றும் குழந்​தை​களின் பாது​காப்பை உறுதி செய்​யத் தவறிய திமுக ஆட்​சியை வீழ்த்​து​வதற்​கும், பாமக அங்​கம் வகிக்​கும் அதி​முக கூட்​ட​ணி​யின் வெற்​றிக்கு கடுமை​யாக உழைக்​க​வும் உறு​தி​யேற்​போம். மாநிலங்​களவை உறுப்​பின​ராக 3-வது முறை​யாக தேர்ந்​தெடுக்​கப் பட்​டுள்ள அன்​புமணிக்கு வாழ்த்​துகள் என்​பது உள்​ளிட்ட 9 தீர்​மானங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன.

இந்த கூட்​டத்​தில் அன்​புமணி பேசி​ய​தாவது: தமி​ழ​கத்​தில் 5 ஆண்​டு​களுக்கு முன்​பு, மது​வின் மூலம் கிடைக்​கும் வரு​மானம் ரூ.35 ஆயிரம் கோடி​யாக இருந்​தது. அது ரூ.60 ஆயிரம் கோடி​யாக அதி​கரித்​துள்​ளது. மது​வின் மூலம் கிடைக்​கும் பணத்​தைக் கொண்டு மாதம் ரூ.1,000, ரூ.5 ஆயிரம் என்று மக்​களுக்கு திமுக லஞ்​சம் கொடுத்து வரு​கிறது. இது​வெல்​லாம் மக்​களுக்​கான வளர்ச்சி திட்​டங்​கள் கிடை​யாது. நம் வீட்​டுப் பிள்​ளை​களுக்கு நல்ல வேலை வாய்ப்பை ஏற்​படுத்​திக் கொடுத்​து, அவர்​கள் கைநிறைய சம்​பா​திப்​பது மட்​டும்​தான் மக்​களுக்​கான வளர்ச்​சித் திட்​டம்.

இஸ்​ரேல் – ஈரான் போரின் காரண​மாக தற்​போது காஸ் சிலிண்​டர் விலை உயர்ந்​துள்​ளது. நாங்​கள் ஆட்​சிக்கு வந்​தால் காஸ் சிலிண்​டர் விலை​யில் 100 ரூபாய் மானி​யம் கொடுப்​போம் என்று திமுக சொல்​லியது. அதை இப்​போது செய்​ய​லாமே. மக்​களுக்​குப் பயனாக இருக்​கும். மாதம் தோறும் மின் கட்​ட​ணம் கணக்​கீடு, நீட் தேர்வு ரத்து போன்ற பல்​வேறு வாக்​குறு​தி​களை திமுக நிறை​வேற்​ற​வில்​லை.

தமி​ழ​கத்​தில் சமூக நீதிக்​காக​வும், மது ஒழிப்​பிற்​காக​வும், கல்விக்​காக​வும், நீர் மேலாண்​மைக்​காக​வும் பல்​வேறு போராட்​டங்​களை நடத்தி பல சாதனை​களை படைத்த கட்சி பாமக. ஆனால், நமக்கு உரிய அங்​கீ​காரம் இன்​னும் கிடைக்​க​வில்லை என்ற வருத்​தம் உள்​ளது.

கடந்த 6 மாத​மாக எனக்கு என்ன நடக்​கிறது என்று நீங்​கள் பார்த்​துக் கொண்டு இருக்​கிறீர்​கள். அவற்​றையெல்​லாம் நாம் கடந்து வந்து கொண்​டிருக்​கி​றோம். ராம​தாஸ் 10 வயது குழந்தை போல ஆகி​விட்​டார். அவரது சூழ்​நிலையை பயன்​படுத்​திக் கொண்​டு, அவரைச் சூழ்ந்து நிற்​கும் சில துரோகி​கள், திமுக கைக்​கூலிகள் ராம​தாஸ் மனதை கெடுத்​து, இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்​டார்​கள்.

ராம​தாஸ் தான் நமக்​கெல்​லாம், குலதெய்​வம். அதில் எந்த மாற்​றுக் கருத்​தும் கிடை​யாது. நாம் சமூகத்​துக்கு பாடுபட வேண்​டிய நிறைய விஷ​யங்​கள் இருக்​கிறது. அதை நோக்​கிச் செயல்​படு​வோம். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.