பாரதியார் குறித்து இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக இன்ஸ்டாகிராமில் ‘பாரதியார் இல்லம்’ புதிய வலைதள பக்கத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
பெண்களின் உரிமை, சமத்துவம் மற்றும் சுதந்திரத்துக்காக ஒரு நூற்றாண்டுக்கு முன்பே கவிதை வாயிலாக உரத்த குரல் கொடுத்தவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். கவிஞராக மட்டுமின்றி, விடுதலைப் போராட்ட வீரராகவும், சமூக சீர்திருத்தவாதியாவும் திகழ்ந்தவர். குறிப்பாக, பெண்கள் விடுதலை, சாதி ஒழிப்பு, தேச பக்தி போன்ற உயரிய சிந்தனைகளைத் தனது படைப்புகள் மூலம் விதைத்தவர்.
“அச்சமில்லை அச்சமில்லை”, “வந்தே மாதரம்” போன்றவை அவரது காலத்தால் அழியாத பாடல்கள். பாரதியார் தனது இறுதி நாட் களை சென்னை திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோயில் அருகில் உள்ள இல்லத்தில் கழித்தார். தமிழக அரசு ‘பாரம் தியார் நினைவு இல்லமாக’ அதை சிறப்பாகப் பராமரித்து வருகிறது.
அதேபோல, அவர் வாழ்ந்த எட்டயபுரம் மற்றும் வாராணசி இல்லங்களும் அரசின் மூலம் நினைவு இல்லங்களாகப் போற்றப்பட்டு வருகின்றன. இந்த இல்லங்களில் பாரதி யாரின் வாழ்க்கை குறிப்புகள், அரிய புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாரதியாரின் சிந்தனைகளையும், அவரது வாழ்க்கை வரலாற்றையும் இன்றைய தலைமுறையினரும், இளைஞர்களும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், தமிழக அரசின் செய்தித் துறை சார்பில் ‘பாரதியார் இல்லம்’ என்ற புதிய இன்ஸ்டாகிராம் வலைதளப் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாரதியாரின் கவிதைகள், அரிய வரலாற்றுக் குறிப்புகள், இதுவரை பலரும் பார்த் திராத புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.





