மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் தீக்குளித்த மாற்றுத் திறனாளி இளைஞர் உயிரிழப்பு

மனித உரிமை ஆணைய அலு​வல​கத்​தில் பெட்​ரோல் ஊற்றி தீக்​குளித்த மாற்​றுத் திற​னாளி இளைஞர் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். விருதுநகரைச் சேர்ந்​தவர் ஆல்​பர்ட் (30).

மாற்​றுத் திற​னாளி​யான இவர் சென்னை வேளச்​சேரி வெங்​கடேஸ்​வரா நகர், 2-வது மெயின் ரோடு பகு​தி​யில் தங்கி ஆட்டோ ஓட்டி வந்​தார். இவர் சென்னை பசுமை வழிச்​சாலை​யில் உள்ள மாநில மனித உரிமை​கள் ஆணை​யத்​தில் புகார் மனு அளிப்​ப​தற்​காக நேற்று முன்​தினம் சென்​றார்.

அப்​போது, அங்கு அவர் திடீரென தீக்​குளித்​தார். அங்கு பணி​யில் இருந்த போலீ​ஸார் தீயை அணைத்து உடனடி​யாக ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

அங்​கிருந்து மேல் சிகிச்​சைக்​காக கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்ட நிலை​யில், ஆல்​பர்ட் நேற்று உயி​ரிழந்​தார்.

 காவல் துறை கொடுத்த நெருக்​கடி: ஆல்​பர்ட் மீது 2 மாதங்​களுக்கு முன்​பு, விருதுநகர் மாவட்​டத்​தைச் சேர்ந்த ஆதி​குருலட்​சமி என்ற பெண் அங்​குள்ள சைபர் க்ரைம் காவல் நிலை​யத்​தில் புகார் ஒன்றை அளித்​திருந்​தார்.

அதில், ஆல்​பர்ட்​டுடன் வர்த்தக முதலீடு செய்​வதற்கு ரூ.1.75 லட்​சம் கொடுத்​த​தாக​வும், அதை அவர் திருப்​பித் தரவில்லை எனவும் புகார் தெரி​வித்​திருந்​தார். இந்த பணத்தை 27.01.2026 அன்று திருப்பி வழங்​கு​வ​தாக உறு​தி​யளித்து ஆல்​பர்ட் எழு​திக் கொடுத்​திருந்​தார்.

ஆனால், குறிப்​பிட்ட தேதிக்​குள் பணத்தை திருப்பி வழங்​க​வில்​லை. எனவே இந்த விவ​காரம் தொடர்​பாக போலீ​ஸார் கொடுத்த நெருக்​கடியே ஆல்​பர்ட் இறப்​புக்​குக் காரணம் எனக் கூறப்​படு​கிறது. இந்த விவ​காரம் தொடர்​பாக அபி​ராமபுரம் போலீ​ஸார் தொடர்ந்​து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.