முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய பிரேமலதா வலியுறுத்தல்

​முல்​லைக்​காடு கப்பல் கட்​டும் திட்​டத்தை உடனடி​யாக ரத்து செய்ய வேண்​டும் என, தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்​து, அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “முல்​லைக்​காடு மற்​றும் அதன் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் அமைய​வுள்ள கப்பல் கட்​டும் தளம், ஆயிரக்​கணக்​கான உப்​பளத் தொழிலா​ளர்​கள் மற்​றும் சிறு உற்​பத்​தி​யாளர்​களின் வாழ்​வா​தா​ரத்​தைக் கடுமை​யாகப் பாதிக்​கும்.

பல தலை​முறை​களாகப் பாரம்​பரிய​மாக நடை​பெற்று வரும் உப்பு உற்​பத்​தித் தொழில், இத்​திட்​டத்​தால் அழி​யும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. பாரம்​பரி​யத் தொழில்​களை​யும், தொழிலா​ளர் உரிமை​களை​யும் காப்​பது அரசின் கடமை​யாகும்.

எனவே, இத்​திட்​டத்தை ரத்து செய்​வதோடு, அப்​பகுதி மக்​கள் மற்​றும் உற்​பத்​தி​யாளர்​களிடம் கருத்​துகளைக் கேட்​டறி​யும் ஜனநாயக முறையை அரசு பின்​பற்ற வேண்​டும். ஏற்​கெ​னவே, விலை வீழ்ச்​சி​யால் தவிக்​கும் பல லட்​சம் உப்பு உற்​பத்தி குடும்​பங்​களின் நலன் கரு​தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என தெரி​வித்​துள்​ளார்​.