வாக்காளர்களுக்கு பணம் தருவதை தடுக்க விதிகளை திருத்த கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

தேர்​தலில் வாக்​காளர்​களுக்கு பணம் கொடுப்​பதை தடுக்​கும் வகை​யில் தேர்​தல் விதி​களில் மாற்​றம் செய்​யக் கோரிய வழக்​கு, சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு மாற்​றப்​படும் என மதுரை அமர்வு தெரி​வித்​தது.

தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் வெற்றிக்காக ஓட்டுக்கு பணம் தருவதாக தொடர்ந்து புகார்கள் இருந்து வருகின்றன.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​: தேர்​தலில் வாக்​காளர்​களுக்கு வாக்​குக்கு பணம் கொடுப்​பதை தடுக்​கும் வகை​யில் தேர்​தல் விதி​களில் மாற்​றம் செய்ய உத்​தர​விட வேண்​டும்.

அனைத்து அரசி​யல் கட்சிகளும் தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக குழந்​தைகள், பெண்​களை வெயி​லில் நீண்ட நேரம் காத்​திருக்க செய்​வதை தடுக்க உத்​தர​விட வேண்​டும்.

தேர்​தலை​யொட்டி கருப்பு பணம் மற்​றும் போதைப்​பொருளை பயன்​படுத்​து​வது, சட்​ட​விரோத செயல்​களில் ஈடு​படு​வோரை தடுக்க சிறப்பு கவனம் செலுத்த உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு அவர் மனு​வில் குறிப்​பிட்​டிருந்​தார்.

இந்த மனுவை அவசர வழக்​காக விசா​ரிக்​கக் கோரி, தலைமை நீதிபதி அமர்​வில் அவரது வழக்​கறிஞர் முறை​யீடு செய்​தார். அதற்கு நீதிப​தி​கள், தேர்​தல் தொடர்​பான இந்த வழக்கை சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு மாற்​றப்​படும் என தெரி​வித்​தனர்.