சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் நியூஜெர்சியில் 13 வயது சிறுமியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய எப்ஸ்டீன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன.
அமெரிக்காவின் பிரபல தொழிலதிபராக வலம் வந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein), சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாகவும் பெண்கள், சிறுமியரை விநியோகித்து, மறைமுகமாக வியாபாரத் தொடர்பு பேணிவந்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.





