இந்தியாவின் அசாம் மாநிலம் ஹோஜாய் பகுதியில், ரயிலுடன் யானைக் கூட்டம் மோதியதில் எட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு குட்டி யானை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து சனிக்கிழமை (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தின் போது, ரயிலின் இயந்திரங்கள் மற்றும் ஐந்து பெட்டிகள் தடம்புரண்டதுடன், பயணிகளுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என அந்நாட்டு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில் தடத்தில் யானைகளின் உடல் பகுதிகள் சிதறி கிடந்ததாலும், ரயில் தடம் புரண்டதாலும், அப்பர் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





