“அற்புதமான வர்த்தக ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன”: சீனாவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பெருமிதம்!

சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடனான சந்திப்பின் போது, இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் வெற்றியைத் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய ட்ரம்ப்,

“இந்த விஜயம் நம்பமுடியாத அளவிற்குச் சிறப்பானது. இதன் மூலம் பல நன்மைகள் கிடைத்துள்ளன என நான் கருதுகிறேன். இரு நாடுகளுக்கும் பெரும் நன்மையளிக்கக்கூடிய சில அற்புதமான வர்த்தக ஒப்பந்தங்களை நாம் செய்துள்ளோம்,” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தச் சந்திப்பின் மூலம் சில வியக்கத்தக்க விடயங்களைச் சாதித்துள்ளதாகத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் வர்த்தகப் போர் மற்றும் மத்திய கிழக்கு போர் பதற்றங்கள் நிலவி வரும் சூழலில், ட்ரம்பின் இந்த நேர்மறையான கருத்துக்கள் உலகப் பொருளாதாரச் சந்தையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடன் சென்றிருந்த முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் சி.இ.ஓ-க்கள் மற்றும் சீனத் தரப்பு பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னரே இந்த வர்த்தக இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக வொஷிங்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.