சிட்னியின் பாண்டி கடற்கரையில் ஒரு யூத ஹனுக்கா கொண்டாட்டம் நடந்தபோது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, மொத்தம் இரண்டு பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் சம்பவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது, மேலும் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

அவுஸ்திரேலிய அதிகாரிகள் பாண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரான நவீத் அக்ரம் (Naveed Akram) என்பவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேநேரம் சம்பவத்தில் காயம் அடைந்தவர்களில் 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் காயம் அடைந்தவர்களில் இரண்டு காவல் துறையினரும் அடங்குகின்றனர்.
இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதனை ஒரு தீவிரவாத தாக்குதல் சம்பவம் என சிட்னி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யூதர்களின் ஹனுக்கா பண்டிகையை கொண்டாடுவதற்காக கூடி இருந்தவர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல வெடிக்கும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு அவற்றை அப்புறப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
ஹணுகாவின் முதல் நாளில் யூத அவுஸ்திரேலியர்கள் மீது குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நமது தேசத்திற்கு இருண்ட தருணம் என்று அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
யூத அவுஸ்திரேலியர்கள் மீதான தாக்குதல் ஒவ்வொரு அவுஸ்திரேலியர் மீதான தாக்குதலாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த தாக்குதல் ஒரு தீவிரவாத சம்பவம் என தெரிவித்த சிட்னி பொலிஸ் ஆணையர் மால் லெனின் பொலிஸார் புலனாய்வாளர்களுடன் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறியுள்ளர்.
இதேவேளை போண்ட பாயில் நடந்த கொடூரமான துப்பாக்கி சூட்டை அவுஸ்திரேலிய முஸ்லிம் சமூகம் கண்டிக்கிறது. அவுஸ்திரேலிய தேசிய இமாம்கள் கவுன்சில் மற்றும் நியூ சவுத் வெல்ஸ் இமாம்கள் கவுன்சில்களும் கண்டனம் தெரிவித்துள்ளன .
இந்த வன்முறை மற்றும் குற்ற செயல்களுக்கு நமது சமூகத்தில் இடமில்லை பொறுப்பாளர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர் .
அதே நேரம் தாக்குதல் தொடர்பில் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக இஸ்ரேல் தூதரகம் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
யூத எதிர்ப்பு வன்முறையிலிருந்து மக்களை பாதுகாக்க அவுஸ்திரேலிய அரசு தீர்க்கமாக செயல்பட வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



