ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரமான குண்டுஸிலிருந்து 61 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



