பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.
இம்மானுவேல் மக்ரோன் இந்திய சுற்றுப்பயணம்
3 நாள் சுற்றுப்பயணமாக இந்த வாரம் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.இந்த பயணத்தின் போது டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ உச்சி மாநாட்டில்(A.I Impact Summit) கலந்து கொள்ளுகிறார்.மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருநாட்டு வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு போன்ற பல முக்கிய துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் உறவு மேம்பாடு குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
பிப்ரவரி 17ம் திகதி மும்பையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கும் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், இந்தியா – பிரான்ஸ் year of innovation நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடியுடன் இணைந்து கலந்து கொள்கிறார்.

அதனை தொடர்ந்து, மும்பையில் இருநாட்டு தலைவர்களின் உயர்மட்ட சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 19ம் திகதி டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ உச்சி மாநாட்டில்(A.I Impact Summit) கலந்து கொள்ளுகிறார்.
கடந்த ஆண்டு பிரான்ஸில் வைத்து நடைபெற்ற ஏ.ஐ உச்சி மாநாட்டில்(A.I Impact Summit) மோடி கலந்து கொண்ட நிலையில், இந்த ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் இந்தியாவுக்கு வந்துள்ளார்.




