இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐவர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடுப்புக்காவல் உத்தரவில் விசாரிக்கப்பட்டு வரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் தலைவரான கெஹெல்பத்தர பத்மே வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் அண்மையில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நேபாள பொலிஸாரின் கூட்டு நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்