உயிர்த்த ஞாயிறன்று லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 வயதுக் குழந்தை உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது முன்னெடுத்து வரும் போரின் ஒரு பகுதியாக, லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்கள் ஞாயிற்றுக்கிழமை தீவிரமடைந்தன. இதில் 4 வயதுக் குழந்தை உட்பட 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
லெபனான் கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடிய வேளையில், அந்நாடு இந்த மாதத்தின் மிக வன்முறையான நாளை எதிர்கொண்டது.
தெற்கு லெபனானில் வெளியேறுமாறு உத்தரவிட்ட சில மணிநேரங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 வயதுக் குழந்தை உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
தலைநகர் பெய்ரூட்டில் ஜனா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 04 பேர் கொல்லப்பட்டதுடன் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சிரியாவுடனான பிரதான எல்லையான மஸ்னா எல்லைச் சோதசை் சாவடி மீது தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அந்த எல்லை மூடப்பட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த 48 மணித்தியாலக் காலவகாசம் இன்று திங்கட்கிழமை (06) அமெரிக்க நேரப்படி இரவு 08 மணியுடன் நிறைவடைகிறது.
எவ்வாறாயினும், ஈரானுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு “நல்ல வாய்ப்பு” இருப்பதாகத் தான் கருதுவதாக ட்ரம்ப் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.





