எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா அவசரகால கையிருப்பில் வைத்திருக்கும் கச்சா எண்ணெய்யில் 17 கோடி பீப்பாய்களை விடுவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டுசெல்லும் முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது.
மேலும், தடையை மீறி செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைக் கடந்து விற்பனையாகி வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் ஏற்கெனவே விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் அமெரிக்காவின் அவசரகால கையிருப்பில் உள்ள கச்சா எண்ணெய்யில் 17 கோடி பீப்பாய்களை சந்தையில் விடுவிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்காவால் 71 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை சேமிக்க முடியும். தற்போது கையிருப்பில் 41 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சேமித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.





