கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
160 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 16 கிலோ குஷ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினால் இந்தக் குழு கைது செய்யப்பட்டனர்.சந்தேக நபர்கள் இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




