சீனாவில் பாலம் இடிந்த விழுந்து விபத்து ; 05 பேர் உயிரிழப்பு

கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.

திங்கட்கிழமை மாலை 5:46 மணிக்கு யான்செங் நகரில் கட்டுமானத்தில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் காணாமல் போன மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (03) தெரிவித்தனர்.