சுவிட்சர்லாந்தில் வழக்கத்தைவிட அதிகமான அளவில் ப்ளூ தொற்று பரவிவருகிறது. சுவிட்சர்லாந்தில் அசாதாரணமான அளவில் ப்ளூ தொற்று பரவி வரும் நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் 800க்கும் அதிகமானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏழு நாட்களில் தொற்று பாதிப்பு கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள், மக்கள் இருமல் முதலான பிரச்சினைகளுக்காக மருந்து வாங்க மருந்தகங்களுக்கு படையெடுப்பது அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
ப்ளூ தொற்றைப் பொருத்தவரை, தடுப்பூசியும், அடிப்படை சுய சுத்தமுமே நல்ல பலனளிக்கும் என்று வலியுறுத்திவருகிறார்கள் சுகாதாரத்துறை அலுவலர்கள்.
மேற்கத்திய நாடுகள் பலவற்றில் ப்ளூ தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, Ticino மற்றும் Valais மாகாணங்கள், மற்றும் Basel நகரம் ஆகியவை அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.



