இந்திய நிறுவனர் ஒருவர், ஜேர்மனியில் 9 ஆண்டுகள் வாழ்ந்தும் இந்திய குடியுரிமையை விட்டுத்தர மறுத்துள்ளார்.
ஜேர்மனியில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இந்திய தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சியாளர் மயூக் பஞ்சா, தன்னிடம் ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதி இருந்தபோதும், அதை ஏற்க மறுத்துள்ளார்.
மயூக் பஞ்சா, முதலில் ஜேர்மனிக்கு முனைவர் பட்ட ஆராய்ச்சியாளராக சென்றார். பின்னர், Populations என்ற AI நிறுவனத்தை நிறுவினார்.
“ஒரு பாஸ்போர்ட் என்பது சாதாரண ஆவணம் மட்டுமல்ல, அது அடையாளம். என் அடையாளம் இந்தியன்.”
“ஜேர்மனியின் வரலாறு, மொழி, கலாச்சாரம் அனைத்தையும் புரிந்துகொண்டாலும், அதனுடன் ஆழமான தொடர்பு இல்லை.”
“பெர்லினின் சர்வதேச சூழலில் வசதியாக இருந்தாலும், ஜேர்மனியின் பிற பகுதிகளில் முழுமையாக வீட்டில் இருப்பது போன்ற உணர்வு இல்லை.” என அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: “ஜேர்மனி கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றாலும் எனக்கு பெரிதாக தாக்கம் இல்லை. ஆனால் இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நான் மிகுந்த உற்சாகம் அடைகிறேன்.”





