நீண்​ட​கால காசா போருக்கு தீர்வு: அமெரிக்கா​வுக்கு இந்தியா பாராட்டு

மத்​திய கிழக்கு நில​வரம் தொடர்​பாக ஐ.நா. பாது​காப்பு கவுன்​சிலில் புதன்​கிழமை விவாதம் நடைபெற்றது. இ​தில் ஐ.நா.வுக்​கான இந்​திய பிர​தி​நிதி பர்வதனேனி ஹரீஷ் பங்​கேற்று பேசி​ய​தாவது: காசா போரை முடிவுக்கு கொண்டு வரு​வதற்​கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்​சில் தீர்​மானத்தை செயல்​படுத்​து​வ​தில் ஏற்​பட்​டுள்ள சமீபத்​திய முன்​னேற்​றத்தை இந்​தியா கவனத்​தில் கொள்​கிறது.

இந்த நீண்​ட​கால போருக்கு தீர்வு காண்​ப​தற்​காக அமெரிக்கா​வுக்கு இந்​தியா பாராட்டு தெரிவிக்​கிறது. காசா போரை முடிவுக்கு கொண்டு வரு​வதற்​கான அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் விரி​வான திட்டத்துக்கு பாது​காப்பு கவுன்​சில் கடந்த நவம்​பரில் ஒப்​புதல் அளித்​துள்​ளது.

காசா அதன் அண்டை நாடு​களுக்கு அச்​சுறுத்​தலை ஏற்படுத்​தாத தீவிர​வாதமற்ற பகு​தி​யாக இருக்​கும் என்​றும் காசா மக்​களின் நலனுக்​காக அவர்​களின் பகுதி மறு மேம்பாடு செய்​யப்​படும் என்​றும் அத்​திட்​டம் கூறுகிறது. காசாவுக்கு மனி​தாபி​மான உதவி​யாக கடந்த 2 ஆண்​டு​களில் 135 மெட்​ரிக் டன் மருந்​துகள் மற்​றும் பொருட்​களை இந்​தியா வழங்​கி​யுள்​ளது. இவ்வாறு ஹரீஷ் கூறினார்.