பலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதை தான் எதிர்க்கவில்லை என்று, ஜோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு இத்தாலி பின்னடித்து வருகின்றமையை எதிர்த்து, அந்த நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்த நாட்டு பிரதமர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.
ஹமாஸ் வமுள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு, ஹமாஸிற்கு அரசாங்கப் பொறுப்புகள் வழங்கப்படாமல் இருந்தால் மட்டுமே, பலஸ்தீன நாட்டை இத்தாலி அங்கீகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இஸ்ரேலை விட ஹமாஸ் மீதே சர்வதேச அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




