பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்துக்கு இணக்கம் – கட்டார் அறிவிப்பு

பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்டார் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளும் அமைதிப் பேச்சு நடத்த முன்வர வேண்டும் என கட்டார் மீண்டும் அழைப்பு விடுத்து இருந்தது.

பின்னர், எல்லை வன்முறையை நிறுத்துதல் மற்றும் எல்லையில் நீண்டகால ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, கட்டார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தில் டோஹாவில் பேச்சு நடந்தது.

ஆப்கான், பாகிஸ்தான், துருக்கி மற்றும் கட்டார் நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். இதில், பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக  கட்டார் அறிவித்துள்ளது.