பிரான்ஸ்-கிரீஸ் இடையே புதிய இராணுவ கூட்டணி

பிரான்ஸ் கிரீஸ் நாடுகளிடையே புதிய இராணுவ கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மற்றும் கிரீஸ் இடையேயான இராணுவ கூட்டாண்மை, மத்திய தரைக்கடல் பகுதியில் பாதுகாப்பு மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக உருவெடுத்துள்ளது.

இந்த ஒப்பந்தம் 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் திகதி கையெழுத்தானது.

இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஆதரவு வழங்கும் உறுதியுடன், தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு துறைகளில் ஆழமான ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

 

கிரீஸ், பிரான்ஸ் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு தனது இராணுவத்தை மேம்படுத்தி வருகிறது.

Dassault Rafale போர் விமானங்கள், Belharra frigates, Exocet ஏவுகணைகள் போன்ற பிரான்ஸ் ஆயுதங்கள் கிரீஸ் கடற்படைக்கு வலிமை சேர்க்கின்றன.

2025-ல் நான்காவது Belharra frigate வாங்கும் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த frigates, Sea Fire ரேடார் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான ஆயுதங்களுடன் வருகிறது.

Naval Group Hellas என்ற பிரான்ஸ் நிறுவனத்தின் கிளை 2023-இல் கிரீஸில் தொடங்கப்பட்டது.

இது ONEX மற்றும் Hellenic Aerospace போன்ற உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது அமெரிக்கா மீது ஐரோப்பா கொண்டுள்ள சார்பை குறைக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.

துருக்கியுடன் நீண்ட கால பதற்றம் காரணமாக, கிரீஸ் 2024-ல் தனது GDP-யின் 3.1 சதவீதத்தை பாதுகாப்பு செலவாக ஒதுக்கியுள்ளது.

பிரான்ஸ்-கிரீஸ் கூட்டாண்மை, மத்திய தரைக்கடல் பகுதியில் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்ற தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது பிரான்ஸின் ஐரோப்பிய பாதுகாப்பு தலைமைக்கான முயற்சிக்கு ஆதரவாகவும், கிரீஸின் நிலையை வலுப்படுத்தும் வகையிலும் அமைகிறது.