பிரான்சில் சுமார் 35,000 மேயர்களை தேர்ந்தெடுப்பதற்காக மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.
பிரான்ஸ் மேயர் தேர்தல்…
பிரான்சில், அடுத்த வாரம், அதாவது, மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை, 34,875 மேயர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன.
விடயம் என்னவென்றால், பிரான்சைப் பொருத்தவரை, மேயர் தேர்தல் என்பது வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது.
ஆகவேதான், அமைச்சர் பதவியைக் கூட ராஜினாமா செய்துவிட்டு மேயர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் சில பிரபலங்கள், சிலர், புதிதாக அரசியலில் கால் பதிப்பதற்காக மேயர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதை அறியும் கருத்துக்கணிப்புகள் ஆங்காங்கே நடைபெற்றுவருகின்றன.
விடயம் என்னவென்றால், புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான நேஷனல் ராலி (The National Rally – RN) கட்சிக்கு அதிக வாய்ப்பு என செய்திகள் தொடர்ந்து வெளியானவண்ணம் உள்ளன.

ஆனால், சுமார் 35,000 மேயர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் தேர்தல் என்பதால், முடிவுகளை கணிப்பது மிகக்கடினம்.





