புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் உட்பட 6 பேர் பனிச்சரிவில் உயிரிழப்பு

பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் மற்​றும் சீனா எல்லைப் பகு​தி​யில் உள்ள காரகோரம் மலைத்​தொடரில், உல​கின் 12-வது மிக உயர்ந்த சிகர​மான ‘பி​ராட் பீக்’ அமைந்துள்ளது.

புகழ்​பெற்ற நேபாள வம்​சாவளி மலை​யேற்ற வீர​ரான நிர்​மல் ‘நிம்ஸ்’ புர்ஜா உள்​ளிட்ட 6 பேர் அடங்​கிய குழு​வினர் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், அவர்கள் சென்று கொண்டிருந்த மேற்​குப் பகுதி பாதை​யில், சுமார் 21,600 முதல் 21,850 அடி உயரத்​தில் கடந்த வெள்​ளிக்​கிழமையன்று திடீரென பனிச்​சரிவு ஏற்​பட்​டது. இதில் சிக்கிய 6 பேரும் உயி​ரிழந்​து​விட்​டனர். இதை அவரது ‘எலைட் எக்​ஸ்​பெட்’ நிறு​வனம் தனது இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்​தில் அதி​காரப்​பூர்​வ​மாக உறுதி செய்​துள்​ளது.

பிரிட்​டனின் ‘குர்க்​கா’ மற்​றும் ‘ஸ்​பெஷல் போட் சர்​வீஸ்’ (எஸ்​பிஎஸ்) படைகளில் பணி​யாற்​றிய முன்​னாள் வீர​ரான நிர்​மல் புர்​ஜா, முழுநேர மலை​யேற்ற வீர​ரான பிறகு பல உலக சாதனை​களைப் படைத்​துள்​ளார்.