லெபனானில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 254 பேர் பலி; 1,165 காயம்

லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 254 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,165 பேர் காயமடைந்ததாகவும் லெபனானின் குடிமைப் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

அந்நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடங்கிய பின்னர், இஸ்ரேல் புதன்கிழமை (8) லெபனான் மீது ஒரு பெரும் தாக்குதலை நடத்தியதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவித்தன.

தரைவழி நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து லெபனான் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

லெபனானின் தலைநகரான பெய்ரூட் உட்பட பல பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்தத் தாக்குதலால், பிராந்திய அமைதி ஒப்பந்தங்கள் முறிந்துபோகும் கடுமையான அபாயம் ஏற்பட்டுள்ளது.

லெபனான் மீதான இந்த இஸ்ரேலியத் தாக்குதலை கத்தார் அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.