நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்

16 ஆண்டுகள் ‘தமிழ் அரசியல் கைதி’யாக ஸ்ரீலங்கா சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ‘விவேகானந்தனூர் சதீஸ்’ அவர்கள், நெருக்கடிமிகு சிறைக்குள்ளிருந்துஎழுதிய உண்மையாவணத் தொகுப்பான ‘துருவேறும் கைவிலங்கு’ நூல்,பிரெஞ்சு தேசத்தில் பொதுவெளி காண்கிறது..!

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்கவியலாத பக்கமான அடிமைச் சிறையின் அவலவாழ்வை அப்பட்டமாகக் கூறும் ஆவணப்பேழை அறிமுகம் காண்கிறது ..!

ஸ்ரீலங்கா சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளான எமது உறவுகளின் விடியலுக்கு வலுச்சேர்க்கும் முகமாக, அனைத்துத் தமிழ் உறவுகளும் இந்நிகழ்வில் பங்கேற்று ஆதரவு நல்குமாறு இனமான உணர்வோடு அழைத்து நிற்கின்றோம்.