இலங்கைத் தமிழரசுக் கட்சிற்கு முரணாக செயற்பட்டால்: ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் !

இலங்கைத் தமிழரசுக் கட்சிற்கு முரணாக செயற்பட்டால்: ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் ! எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு எடுத்த முடிவுகளுக்கு முரணாக செயற்பட்டால் அவர்களுக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக் கூடும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

– இவ் விடயம் தொடர்பில் அவர் கூறிய விடயங்கள் வருமாறு,

இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி அரசியல் குழு, சபைகளில் நிர்வாகங்களை ஏற்படுத்துவது தொடர்பாக எடுத்த முடிவுகளையே கட்சியின் தலைவரும் பொதுச்செயலாளரும் நடைமுறைப்படுத்துகின்றார்கள்.

அவற்றுக்கு மாறாக அல்லது முரணாக கட்சியின் மாவட்டக் கிளை, தொகுதிக் கிளை என்ற பெயரில் உறுப்பினர்கள் செயற்பட்டால் அல்லது நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை ஏற்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து தீர்மானங்களை எடுத்து இருக்கின்றது. அந்தத் தீர்மானங்களே கட்சியின் முடிவுகள். அவற்றையே கட்சியின் தலைவரும் பொதுச்செயலாளரும் உறுப்பினர்களுக்கு அறிவித்து முன்னெடுக்கின்றார்கள்.

அவற்றையே கட்சியின் முடிவாகக் கருதி முனெடுக்க வேண்டியது கட்சி உறுப்பினர்களின் கடமையாகும். என்று சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.