முல்லைத்தீவு – குமுழமுனையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூலக்கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (15) நடைபெற்றது.
அந்த வகையில் குமுழமுனைப் பகுதியைச் சேர்ந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான செல்லையா சிறீஸ்கந்தராசா தலைமையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
இதன்போது அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குமுழமுனை கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் இரத்தினராசா மயூரன் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.






