கொழும்பில் மனித பாவனைக்குதவாத பருப்பு கைப்பற்றல் !

கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்து மனித பாவனைக்கு உதவாத 1,000 கிலோ கிராம் பருப்பு தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த பருப்பு தொகை கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த பருப்பு தொகையானது ஏனைய விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்காகத் தயாராக இருந்துள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.