தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக மீண்டும் தொடர் போராட்டம்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரியும், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்குமாறு வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் செவ்வாய்க்கிழமையும் (28.07.2026), பெளர்ணமி நாளான நாளை புதன்கிழமையும் (29.07.2026) தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நடாத்தப்படவுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை-04 மணி முதல் மாலை-06 மணி வரையும், பெளர்ணமி நாளான நாளை புதன்கிழமை காலை-07 மணி முதல் மாலை-06 மணி வரையும் போராட்டம் இடம்பெறும். இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள், அனைத்துக் கட்சியினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு வலுச் சேர்க்குமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்