சங்கானைப் பிரதேச வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்துவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வியாழக்கிழமை (04.06.2026) சங்கானைப் பிரதேச வைத்தியசாலைக்கு நேரில் விஜயம் செய்து பார்வையிட்டதுடன் வைத்தியசாலையைத் தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
சங்கானைப் பிரதேச வைத்தியசாலை ஒர் ஆதார வைத்தியசாலைக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டு செயலாற்றுவதாகவும் அவர் கூறினார்.






