சிறிலங்கா ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அதிகாரப்பகிர்வு மற்றும் அதிகார சமத்துவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றது

உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய இடைக்கால உத்தரவு குறித்து ஜனாதிபதி மேற்கொண்ட சமீபத்திய நடவடிக்கைகள் அதிகாரப் பகிர்வு மற்றும் அதிகார சமத்துவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் எமது நாட்டின் ஜனநாயக கொள்கைகளை அச்சுறுத்துவதாகவும் அமைகின்றனஎன ஹாஸ்டாக் ஜெனரேசன் தெரிவித்துள்ளது.

ஹாஸ்டாக் ஜெனரேசன்  மேலும் தெரிவித்துள்ளதாவது.

இலங்கை அரசாங்கமானது சட்டத்துறை நிர்வாகத் துறை மற்றும் நீதித்துறை என முத்துறைகளைக் கொண்டமைந்துள்ளது. இந்த முத்துறை அதிகாராங்கள்  தனி ஒரு நபர் அல்லது தனி ஒரு நிறுவனத்தில் குவிவதைத் தடுக்கவும் ஒவ்வொரு துறைகளுக்கும் உள்ள பொறுப்புகள் மற்றும் கடமைகளை அரசியலமைப்பானது அடிக் கோடிட்டுக் காட்டுகின்றது.

அதுமட்டுமின்றி ஆட்சிக் கட்டமைப்பிற்குள் அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் நடைமுறைப்படுத்துபவர்களிடையே அதிகாரப் பகிர்வு மற்றும் அதிகாரப் சமத்துவம் மூலம் பொறுப்புக்கூறலை  நிறுவுவதற்காக வழிமுறைகளும் அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் திரு. தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய இடைக்கால உத்தரவு குறித்து ஜனாதிபதி மேற்கொண்ட சமீபத்திய நடவடிக்கைகள் அதிகாரப் பகிர்வு மற்றும் அதிகார சமத்துவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் எமது நாட்டின் ஜனநாயக கொள்கைகளை அச்சுறுத்துவதாகவும் அமைகின்றன.

எனவே இலங்கையின் குடிமக்கள் என்ற வகையில் அதிகாரப் பகிர்வு மற்றும் அதிகார சமநிலையை வலுப்படுத்தும் வகையில் உரிய நடைமுறையை நிலைநிறுத்தவும் மதிக்கவும் நிறைவேற்று மற்றும் சட்டவாக்கக் துறைகளை நாங்கள் கோருகிறோம்.

அத்தோடு தேர்தல் காலம் நெருங்கும் போதே அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தெளிவான அதிகாரப் பகிர்வை ஊக்குவிக்கும் மற்றும் ஒரு துறையில் அதிகாரம் குவிவதைத் தடுக்கும் முகமான கொள்கைத் திட்டங்களை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.