வரலாற்றுப் புகழ்மிக்க கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமக் கந்தன் ஆலயத்துக்கு வேல் அனுப்பும் நீண்டகாலப் பாரம்பரியம் மிக்க பயணப் பூசை நேற்றுப் புதன்கிழமை (15.07.2026) இரவு நடைபெற்றது.
பெருமளவான அடியவர்கள் குறித்த பூசை வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதேவேளை, கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல் விழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.



