மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லூனர் விளையாட்டுப்போட்டி – காம்,யேர்மனி

இந்த ஆண்டுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லூனர் விளையாட்டுப்போட்டிகள் க‌ட‌த்‌த சனிக்கிழமை காம் நகரில் நடைபெற்றது. வடமத்திய மாநிலத்தில் உள்ள 18 தமிழாலயங்களில் இருந்து 502 போட்டியாளர்கள் பங்குபற்றிய இவ் விளையாட்டுப் போட்டியில் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் வடமத்திய மாநிலப்பொறுப்பாளர் திரு முத்துவேல் ஜெயலவதாஸ் ஏற்றி வைக்க யேர்மன் நாட்டுக்கொடியை தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் வடமத்திய மாநிலப் பொறுப்பாளர் செல்வி அபிநயா ஜெயா அவர்கள் ஏற்றி வைத்தார் ,

தமிழீழத் தேசியக்கொடி ஆன்ஸ்பேர்க் நகர கோட்டப்பொறுப்பாளர் திரு. ரவீரஞ்சன் அவர்கள் ஏற்றி வைக்க தமிழ்க்கல்விக்கழகத்தின் கொடியை தமிழ்கல்விக்கழகத்தின் விளையாட்டுப்பிரிவுப் பொறு்பாளர் ஏற்றி வைக்க ஈகைச்சுடரினை தமிழர் விளையாட்டுக்கூட்டமைப்பின் பணியகச் செயற்பாடளார் திரு. மகரந்தன் திருபாலசிங்கம் அவர்கள் ஏற்றி வைக்க மாவீர்ர் பொதுப்படத்திற்கான மலர் மாலையை தமிழர் விளையாட்டுக்கூட்டமைப்பின் உதைபந்தாட்டப் பொறுப்பாளர் கார்த்திகேசு ஜெயகரன் மற்றும் ஓட்டம் கனணி பிரிவுப் பொறுப்பாளர் செல்வன் சரன் ராஜகுமாரன் ஆகியோர் அணிவித்தனர். அகவணக்கத்துடன் ஆரம்பித்த இந் நிகழ்வில் ஒலிம்பிக்சுடர் ஏற்றலுடன் அணிநடைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து விளையாட்டுக்கள் ஆரம்பமாகின விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில்-

மத்திய மாநிலத்தில்

1வது்இடத்தை 652 புள்ளிகளை பெற்று டோட்மூன் தமிழாலயமும்

2வது இடத்தை 530 புள்ளிகளப் பெற்று டுயூஸ்பேர்க் தமிழாலயமும்.

3 வது இடத்தை 240 புள்ளிகளைப் பெற்று போகும் தமிழாலயமும் பெற்றுக்கொண்டன

வெற்றி பெற்ற தமிழாலயங்களுக்கு மாவீரர் நினைவு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டன.