தொடருந்து பணியாளர்களின் பற்றாக்குறைக்கு தீர்வுகாண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன கோட்டை தொடருந்து நிலையத்திற்கு வருகை தந்திருந்த போதே ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.
பிரசன்ன குணசேன மேலும் தெரிவிக்கையில்,
ரயில் பணியாளர்கள் பற்றாக்குறை பிரச்சினை என்பது பல வருடங்களாக இடம்பெற்று வருகின்றது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
ஒன்றரை வருட காலத்திற்கு பின்னர் தொடருந்து பணியாளர் பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகள் தீரும் என நம்புகின்றோம். எவ்வாறிருப்பினும் தொடருந்து சேவைகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.
தொடருந்து திணைக்களம் முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிட முடியாது.
தொடருந்து திணைக்களத்துடன் இணைந்து கலந்துரையாடினால் இந்த பிரச்சினைகள் முடிவடையும் என நம்புகின்றோம் என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.