நான்கு கால்களுடன் பிறந்த கோழிக் குஞ்சு

மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை எல்லை வீதியிலுள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் அபூர்வ கோழிக் குஞ்சு ஒன்று பிறந்துள்ளது.

வீட்டு உரிமையாளர் முகம்மட் நஸீர் என்பவர் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி 11 முட்டைகளை அடைகாக்க வைத்துள்ளார்.

அவ்வாறு அடைகாக்க வைத்த முட்டைகளில் இருந்து நேற்று (21) செவ்வாய்க்கிழமை 9 கோழிக் குஞ்சுகள் பிறந்துள்ளன.

அதில் ஒரு கோழிக் குஞ்சு நான்கு கால்களுடன் பிறந்துள்ளது.

கறுப்பு மற்றும் மஞ்சள் நிறம் கலந்த நிலையில் ஆரோக்கியத்துடன் நான்கு கால்கள் கொண்ட அழகிய கோழிக் குஞ்சை பலரும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.