“பலஸ்தீனத்துக்கு வாழ இடங்கொடு” : கொழும்பில் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

சோசலிஸ இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘பலஸ்தீனத்துக்கு வாழ இடங்கொடு’ எனும் மகுடத்தின் கீழ் இன்று திங்கட்கிழமை (23) கொழும்பில் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த அணிவகுப்பு கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதரகம் முதல் சுதந்திர சதுக்கம் வரை சென்றது.