புதையல் வேட்டை: பிரதி காவல்துறை மா அதிபர் அடையாளம் காணப்பட்டார்

புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் உதித் லியனகே இன்றைய அடையாள அணிவகுப்பின் போது சாட்சியாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புதையல் வேட்டை தொடர்பாக அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர் இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதன்போது, அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டு, அடையாளம் காணப்பட்டதன் பின்னர், அவரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.